வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:21 IST)

சேப்பாக்கம் தொகுதியை என் மனைவி பறித்துவிடுவாரோ? உதயநிதியின் காமெடி பேச்சு!

சென்னை சேப்பாக்கம் தொகுதியை எனது மனைவி என்னிடம் இருந்து பறித்து விடுவார்களோ என்ற பயம் தனக்கு இருப்பதாக சமீபத்தில் நடந்த விழாவில் உதயநிதி காமெடியாக பேசியுள்ளார்
 
மயிலாப்பூரில் நடந்த உலக கழிப்பறை நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் என்னை விட எனது மனைவி தான் அதிகமாக சுற்றிக்கொண்டு சமூக சேவைகளை செய்து வருகிறார் என்றும் அடுத்த தேர்தலில் நான் வேறு தொகுதி மாற வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்
 
சென்னை சேப்பாக்கம் தொகுதி முழுவதும் அவர் சிறப்பான சமூக சேவைகளை செய்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த பேச்சியில் இருந்து அடுத்த தேர்தலில் கிருத்திகா உதயநிதியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது