செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (10:55 IST)

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்த தமிழகம்! – யுனிசெஃப் பாராட்டு!

தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில் மாணவர்களை திரும்ப பள்ளிகளுக்கு அழைத்து வருவதில் சிறப்பாக செயல்பட்டதாக யுனிசெஃப் பாராட்டியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்திலும் பள்ளிகள் விடுமுறையில் இருந்த நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி மற்றும் தேர்வு ஆகியவற்றை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் மீண்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பள்ளி திறந்தபின் மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்கு தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதாக யுனிசெஃப் அமைப்பு பாராட்டியுள்ளது. இதுகுறித்து பேசிய யுனிசெஃப் இந்திய தலைவர் ஹ்யூம் ஹி பன் “கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் அழைத்து வர உலக நாடுகள் சவால்களை சந்தித்தது. ஆனால் கொரோனா பிறகு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் திட்டங்கள் சிறப்பாக உள்ளன. தமிழ்நாடு "Game Changer" ஆக இருந்தது” என்று பாராட்டியுள்ளார்.

மேலும் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு, திறன் சார்ந்த பயிற்சிகள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.