செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (08:51 IST)

திருவாரூர் ஆழித்தேரோட்டம் தொடங்கியது! – ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்!

தமிழ்நாட்டின் பிரபலமான திருவாரூர் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த தேரோட்டத்தை காண தமிழகம் முழுவதிலும் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர்.

இன்று ஆழித்தேரோட்டம் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தளர்வுகளும் உள்ளதால் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே பலரும் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஆழித்தேரோட்டம் காரணமாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.