திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (23:43 IST)

விஜய் பட பிரபலத்திற்கு திருமணம்….

தமிழ் சினிமாவில் பிரபல காஷ்டியூம் டிசைனர் சத்யாவின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் நடிகர் சசிகுமார்.

தமிழ் சினிமாவில் தெறி, பைரவா உள்ளிட்ட படங்களின் நடிகர் விஜய்க்கு காஷ்டியூம் டிசைனராகப் பணியாற்றியவர்  என்.ஜே.சத்யா. இவர் ராஜாராணி, ஜிகர்தண்டா, போக்கிரிராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களிலும் காஷ்டியூம் டிசைனராகப் பணியாற்றியுள்ளார்.

இவர், மனோபாலா, சசிகுமார், நாசர் உள்ளிட்ட நடிகர்ளை வைத்து போட்டோர்சூட் வைத்து சமூககவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அவை வைரலாகி ரசிகர்களின் பாராட்டுகளைப்பெற்றது.

இந்நிலையில் இன்று காஷ்டியூம் டிசைனர் என்.ஜே,சத்யாவுக்கும், கோகிலாவுக்கும் பொள்ளாச்சியில் திருமணம்  நடந்தது. இவர்களின் திருமணத்தை நடிகர் சசிகுமார் முன்னின்று நடத்திவைத்தார்.