புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:58 IST)

ரஷ்ய எண்ணெய் கிணறு மீது உக்ரைன் தாக்குதல்?

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம்  படையெடுத்து  37 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது .

தற்போது உக்ரைனில் உள்ள கீ வை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இ ந் நிலையில், உக்ரைன் ஒட்டிய ரஷ்ய எல்லையிலுள்ள ஒரு எண்ணெய் கிடங்கு மீது இன்று தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது.  இதில்,  எண்ணெய் கிணறு தீப்பற்றி எரிகிறது.

தீயணைப்புத்துறையினர் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுளனர்.  இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, உக்ரைன் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் உக்ரைன் இதுவரை இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பெற்கவில்லை.