1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (00:09 IST)

செர்னோபில் அணுசக்தி தளத்திலிருந்து வெளியேறும் ரஷ்ய படைகள்: யுக்ரேனிய அணுசக்தி அமைப்பு

செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றிய ரஷ்ய துருப்புக்கள் வியாழக்கிழமை அந்த நிலையம் மற்றும் பிற இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கின என்று யுக்ரேனிய அணுசக்தி அமைப்பான எனர்கோட்டம் தெரிவித்துள்ளது.
 
"இன்று காலை, படையெடுப்பாளர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்தை விட்டு வெளியேற தங்கள் விருப்பங்களை அறிவித்தனர்," என்று எனர்கோட்டம் தனது டெலிகிராம் தளத்தில் கூறியுள்ளது.
 
ரஷ்ய துருப்புக்கள் "பெலாரூஸுடனான யுக்ரேனிய எல்லையை நோக்கி இரண்டு நெடுவரிசைகளில் அணிவகுத்துச் சென்றன. சிறிய எண்ணிக்கையிலான ரஷ்ய படைகள் விமான நிலையத்தில் தங்கியிருப்பதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.