1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (12:23 IST)

ரஷ்யாவுடன் ஒப்பந்தம்.. இந்தியா விலைக்கொடுக்கும் என அமெரிக்க வார்னிங்?

இந்தியா - ரஷ்யா இடையேயான கச்சா எண்ணெய் ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. எனினும் சில நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடம் எரிபொருட்களை வாங்கி வருகின்றன. குறிப்பாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மலிவான விலையில் கச்சா எண்ணெய் அனுப்ப ரஷ்யா முன்வந்துள்ளது. 
 
ஆம்,  இந்தியாவுக்கு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 35 டாலர்களுக்கு வழங்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்நிலையில் இந்தியா - ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ இது குறித்து கூறியதாவது, வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்க வேண்டிய நேரமிது. ரஷ்யாவிடன் கச்சா எண்ணெய் வாங்கி தடைகளை மீறும் நாடுகள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.