அருண் ஜெட்லீ பத்தி தப்பா பேசல..! – பாஜக புகாருக்கு உதயநிதி மறுப்பு!

Prasanth Karthick| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (17:37 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லீ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளிக்கப்பட்டுள்ள புகாரை உதயநிதி ஸ்டாலின் மறுத்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் முன்னதாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காலம்சென்ற பாஜக மூத்த தலைவர்களான அருண் ஜெட்லீ மற்றும் சுஷ்மா சுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவினர் உதயநிதி மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த புகார் குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு விளக்கம் அளிக்க சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் நோட்டீஸில் உள்ள புகார்களை தான் மறுப்பதாகவும், தான் அவ்வாறு பேசவில்லை எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :