ஆதாரங்கள் இருந்தும் அரசு அமைதி காப்பது ஏன்? உதயநிதி

udhayanithi
sinoj| Last Modified திங்கள், 29 ஜூன் 2020 (21:49 IST)
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளதில் தந்தை மகன் இருவர் மரணம் அடைந்தனர். இது இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில்,  உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டது என்பது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் மீது போலீசுக்கு முன்பே கோபம் இருந்துள்ளதும் தெரியவருகிறது. போலீஸ் மீது கொலை வழக்கு பதிய அனைத்து ஆதாரங்கள் இருந்தும் அரசு அமைதி காப்பது ஏன்?#ArrestKillersOfJayarajAndBennix என தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :