ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (06:53 IST)

எய்ம்ஸ் செங்கல் விவகாரத்தில் நன்றி கூறிய உதயநிதி: யாருக்கு தெரியுமா?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அதன் பின் எந்தவித பணிகளும் தொடங்காமல் உள்ளன. இது குறித்து கேலி செய்யும் வகையில் இது தான் எய்ம்ஸ் மருத்துவமனை என தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு செங்கலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை வைத்திருந்த செங்கலை உதயநிதி திருடி விட்டார் என்று அவர் மீது புகார் கொடுத்த காமெடியும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் குறித்து நெட்டிசன் ஒருவர் கார்ட்டூன் படம் ஒன்றை வரைந்து இருந்தார். அந்த படம் இணைய தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் அந்த கார்ட்டூன் வரைந்த ஓவியருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
செங்கல் ரெய்டு’ ஓவியருக்கு அன்பும் நன்றியும். இந்த ஒரேஒரு அடிக்கல்லை மதுரை தோப்பூரில் வைப்பதா, தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் வைப்பதா என இரு ஊராருக்கும் அடிமைகள் அப்போது உரசலை ஏற்படுத்தினர். மோடியிடம் கேட்டிருந்தால், இந்தாருங்கள் இரு அரைக்கல்கள் என உடைத்து தந்திருப்பார்.