1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (08:38 IST)

என் வீட்டுக்கு ரெய்டு வாங்க… அட்ரஸ் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தன் வீட்டுக்கு வருமான வரிசோதனை வரும்படி வருமான வரித்துறையினருக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் தேர்தல் பிரச்சார முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் தனது வீட்டு முகவரியைக் கொடுத்து முடிந்தால் அங்கு வந்து சோதனை செய்யுமாறு வருமான வரித்துறையினருக்கு அழைப்பு விடுத்து பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.