1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (12:57 IST)

உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக பிரமுகர் கொடுத்த பதிலடி!

திமுக இளைஞர் அணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது மோடி தொல்லையால் தான் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இறந்ததாகவும் மோடியின் தொல்லையால் தான் யஷ்வந்த் சின்ஹா என்பவர் வேறு கட்சிக்கு சென்றதாகவும் கூறியிருந்தார் 
 
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது என்பதும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இதனை கண்டித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உதயநிதியின் இந்த பேச்சு குறித்த வீடியோவை பதிவு செய்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர் அதில் கூறியிருப்பதாவதுள்
 
அண்ணாதுரை ன்னு ஒருத்தரு இருந்தாருமா. கருணாநிதியோட தொல்லை தாங்காம இறந்தே போயிட்டாரு. கருணாநிதினு ஒருத்தர் இருந்தாரு. ஸ்டாலின் தொல்லை, அழுத்தம், டார்ச்சர் தாங்காம 'அந்த ஆளு' இறந்தே போயிட்டாரு என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.