செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (08:35 IST)

எல்லையில் இந்தியா சீனா மோதல் –வித்தியாசமாக எதிர்ப்பைத் தெரிவித்த இசையமைப்பாளர் ஜிப்ரான் !

இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையில் எல்லையில் நடந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஜூன் 15ம் தேதி லடாக் பகுதியில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் எல்லையோரத்தில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், சீனத் தரப்பில் இருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை. இந்த சம்பவத்தை அடுத்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன.

இதையடுத்து இந்தியாவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கல் எழுந்துள்ளன. இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது டிக்டாக் மற்றும் ஹெலோ ஆப்களின் கணக்குகளை டெலிட் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த இரண்டு செயலிகளும் சீன நிறுவனங்களின் தயாரிப்பாகும்.