நான் ஸ்கூல் படிக்கும் போதே ஒருவர் அப்படித்தான்: உதயநிதி கூறும் அந்த ஒருவர் யார்?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:04 IST)
நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே ஒருவர் அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி வருகிறார் என உதயநிதி பேசியுள்ளார். 
 
கடலூர் மாவட்டம், வடலூரில் இளைஞரணி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட உதயநிதி, பின்வருமாறு பேசினார்...
 
நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்திலேயே ஒருவர் அரசியலுக்கு வருகிறேன்... வருகிறேன்... என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் இன்று வரை வரவில்லை. அவரை பற்றி திமுகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
rajini
தமிழகத்தில் பாஜக துணையுடன் நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சியை அகற்றிட தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர் எனவும் கூறினார். ரஜினிகாந்த் கூறும் ஒவ்வொரு கருத்துக்கும், பேட்டிக்கும் திமுகவின் முன்னணி தலைவர்கள் கூட பதில் சொல்லாமல் மௌனம் காக்கின்றனர்.
 
ஆனால் சமீபத்தில் அரசியலுக்குள் நுழைந்து ஒரு சில மாதங்களிலேயே திமுக இளைஞரணி செயலாளர் பதவியைப் பெற்று விட்ட உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது ரஜினியை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :