1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 மார்ச் 2026 (15:59 IST)

திருப்பதி லட்டு பிரசாதமும் பற்றாக்குறையா? நெய் வரவில்லையா? தேவஸ்தானம் விளக்கம்..!

Tirupathi Laddu
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க நெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
கடப்பா மாவட்டம் கொண்டாப்பூர் அருகே நெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளான வீடியோ வைரலானதை தொடர்ந்து, லட்டு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல்கள் பரவின.
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேவஸ்தானம், விபத்துக்குள்ளான லாரி நெய் சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஒன்றிற்கு சொந்தமானதுதான், ஆனால் அதனால் லட்டு தயாரிப்பில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க தேவையான நெய் மூன்று வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதால், ஒரு நிறுவனத்தின் விநியோகம் பாதிக்கப்பட்டாலும் மற்ற நிறுவனங்கள் மூலம் தங்கு தடையின்றி நெய் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. 
 
தற்போது சுமார் ஏழு லட்சம் லட்டுகள் இருப்பு இருப்பதாகவும், கோடைக்கால நெரிசலை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனத் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
 
Edited by Siva