புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (09:17 IST)

இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல்..

இன்னும் சற்று நேரத்தில் தமிழக சட்டப்பேரவையில் 2020-21க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

இதில் குடிமராமத்து பணிகளுக்காகவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும், சென்னையில் குடிநீர் வழங்க உருவாக்கப்பட்டு வரும் புதிய நீர்பிடிப்பு ஏரிக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

மேலும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அரசு மாணவர்களுக்கு காலை சுற்றுண்டி வழங்குதல், விவசாயிகளுக்கு டெல்டா குறித்த அறிவிப்புகள் ஆகியவை எதிர்ப்பார்க்கப்படலாம்