திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 22 டிசம்பர் 2020 (13:24 IST)

எல்லோரும் ஏன் எம்ஜிஆர் ஆட்சி தரேன்னு சொல்றாங்க – உதயநிதி ஸ்டாலின் பதில்!

அனைத்துக் கட்சிகளும் எம் ஜி ஆர் ஆட்சி பற்றி பேசுவது ஏன் என உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் ரஜினி, கமல் மற்றும் சீமான் கட்சிகள் என பலரும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் இருவரும் தாங்கள் எம் ஜி ஆர் ஆட்சி அமைப்போம் எனக் கூறிவருகின்றனர். இதனால் அதிமுகவினர் அப்படியானால் அவர்கள் எங்கள் கட்சியில்தான் சேரவேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அனைவருமே எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என சொல்வது பற்றி திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது  ‘கலைஞர் ஆட்சி அமைப்போம் என சொன்னால் நிறைய வேலை செய்ய வேண்டும். அதனால்தான் எல்லோரும் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் எனக் கூறுகின்றனர்’ எனக் கூறியுள்ளார்.