தொடர்புடைய செய்திகள்
- தமிழ் ஆட்சி மொழி வார விழா!
- மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் 33 வது நினைவுதினம் !
- ’’அவருடைய மாணவன் நான்’’… ’’இது ட்வீட்டில் அடங்காத் துயரம்’’ – தொ.பரமசிவன் மறைவுக்கு சீமான, கமல் இரங்கல்
- கோவிலுக்கு வந்த வயதான பெண்ணை முதுகில் சுமந்து சென்ற காவலர் !!
- பிரபல நடிகரின் படத்தின் பெயர் மற்றும் ரிலீஸ் தேதி மாற்றம் !!!
#உதை_வாங்கிய_உதயநிதி: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #உதை_வாங்கிய_உதயநிதி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக இப்போதே தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுபயண பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில், அரியலூர் - திருமானூரில் ஜி.கே.மூப்பனார் அரங்கத்தின் பெயரை மறைத்து திமுக பரப்புரை செய்ததாக த.மா.கா-வினர் புகார். கட்சி கொடியுடன் உதயநிதி வாகனத்தை த.மா.கா-வினர் மறித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஜி.கே.மூப்பனார் பெயரை அழித்ததற்காக உதயநிதி மட்டுமின்றி திமுக நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ள நிலையில் திருமானூரில் ஜி.கே.மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டது திமுகவினரின் செயல் அல்ல அம்மாவட்ட செயலர் சிவசங்கர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து #உதை_வாங்கிய_உதயநிதி என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
