1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:28 IST)

அரசின் எதேச்சதிகாரப் போக்கை கண்டு கண்டான உதயநிதி!!

எளிய மக்களின் கோபம் பெரியது என்பதை உணர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் டிவிட். 

 
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வால மக்கள் அவதிப்பட்டு வருவதை குறிப்பிட்டு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்... 
 
வேலைவாய்ப்பு உயரவில்லை, பொருளாதாரம் மேம்படவில்லை, கடன் குறையவில்லை. ஆனால் விலைவாசி மட்டும் கூடிக்கொண்டே போகிறது. பெட்ரோல் - டீசல் விலை விண்ணை முட்டிய நிலையில், கேஸ் சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.100 உயர்ந்து ரூ.810 ஆகியிருப்பது மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியைக்காட்டுகிறது.
 
மத்திய நிதி அமைச்சரின் வெற்று சமாளிப்புகளும் விலைவாசி உயர்வுபற்றி எந்த சலனமும் இல்லாமல் கொள்ளையடிக்கும் அடிமை அரசின் உதாசீனமும் கடும் கண்டனத்துக்குரியவை. அரசுகளின் எதேச்சதிகாரப் போக்கைவிட எளிய மக்களின் கோபம் பெரியது என்பதை உணர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.