1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:14 IST)

திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைந்து 25 ஆண்டுகளாகிவிட்டன- மோடி

திமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் திமுக அதிமுக என மாறி மாறி ஆட்சி அமைத்தாலும், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் தான் திமுக ஆட்சி அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இன்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்
 
திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் ஆகி விட்டன என்றும் ஒட்டுமொத்த தமிழகத்துக்கான கட்சி என்ற தகுதியை திமுக இழந்து விட்டது என்றும் அவர் கூறினார்
 
பிராந்திய கட்சிகளுக்குள் ஒரு பிராந்திய கட்சியான திமுக இருக்கிறது என்றும் திமுக காங்கிரஸ் கூட்டணி பிரச்சினைகளால் நல்லாட்சியை தர முடியாது என்றும் அவர் தெரிவித்தார்
 
மேலும் ஜெயலலிதாவுக்கு தொல்லை கொடுத்தவருக்கு காங்கிரசும் திமுகவும் வெகுமதி கொடுத்ததாகவும் மோடி குற்றம்சாட்டினார். தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியது அதிமுகவும் மத்திய பாஜக அரசும் தான் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்பது அனைத்து மாநிலங்களின் விருப்பங்களை கொண்ட கட்சி என்றும் அவர் தெரிவித்தார்