1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2019 (10:23 IST)

இவர்கள்தான் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர் – திமுக எம்.எல்.ஏ ஆதங்கம்

சட்டமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நோட்டாவுக்கு வாக்களிப்பது யார் எனக் கேள்வி எழுப்பினர்.

நேற்று சட்டமன்றத்தில் சிறு மற்றும் குறு தொழில்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பட்டாசு தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர். மேலும் ’அவர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.  ஆனால் அதன் மூலம் புதிதாக யாரும் தொழில் தொடங்கியதாக தெரியவில்லை எனக் கூறினார்.

இதனால் புதிதாக யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலைக் கிடைக்காத இளைஞர்கள் விரக்தியில் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர். அதனால் புதிதாக தொழில்களைத் தொடங்கி அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
.