இளம்பெண்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்!

இளம்பெண்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்!
siva| Last Updated: புதன், 23 டிசம்பர் 2020 (18:22 IST)
இளம்பெண்களுடன் கலந்துரையாடிய உதயநிதி ஸ்டாலின்!
அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளன என்பது தெரிந்ததே
ஏற்கனவே திமுக உள்பட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திமுக இளைஞரணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்

கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரில் ஆரம்பித்த அவரது தேர்தல் பிரச்சார பயணம் தற்போது கடலூர் மாவட்டத்தில் வந்துள்ளது. நெய்வேலியில் இன்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அங்கு உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுடன் கலந்துரையாடினார்

அப்போது இளம்பெண்களுடன் கலந்துரையாடியபோது ’அடிமை அரசால் எப்படி எல்லாம் நம் உரிமைகளை இழக்கிறோம். சுயமரியாதை மிக்க கழக அரசுகள் அமையவேண்டும். தமிழகம் தனித்தன்மையுடன் திகழ வேண்டும் என்று பேசினார். மேலும் தனக்கு ஆதரவளித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுடன் உதயநிதி கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :