புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (10:04 IST)

ரூ.2,500-கே டங்குவார் கிழியுது... இதுல ரூ.5,000 வேற: போங்க மிஸ்டர் உதயநிதி!

அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது, குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 
 
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் ஜனவரியில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கள் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பாக நியாய விலை கடைகள் மூலமாக பொங்கல் பொருட்கள், கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படுவது வழக்கம். 
 
இந்நிலையில் வரும் பொங்கலுக்கு பொங்கல் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பின்னர் எதிர்கட்சிகளும், கூட்டணி கட்சியும் இது பொங்கல் பரிசா அல்லது தேர்தல் வருவதால் மக்களுக்கு மறைமுகமாக வழ்ங்கப்படும் லஞ்சமா என தமிழக அரசை கேள்விகளால் துளைத்து வருகின்றனர். 
 
ஆனால், அரசு அறிவித்துள்ள ரூ.2,500 போதாது, குடும்பத்துக்கு ரூ.5,000 கொடுங்கள் என உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.