ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (12:22 IST)

அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்! சூளுரை ஏற்ற திமுக! – சூடுபிடிக்கும் அரசியல் களம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலினை அமர்த்துவது என திமுகவினர் சூளுரை ஏற்றுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு, மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, சுற்றுசூழல் தாக்க அறிக்கை ரத்து செய்தல் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்வரும் தேர்தலில் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக்க வேண்டும் திமுகவினர் சூளுரை ஏற்றுள்ளனர்.

கூட்டணி கட்சிகளும் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி தேர்தலை சந்திக்க தயாராக உள்ள நிலையில், திமுகவில் தீர்மானமாகவே கொண்டு வரப்பட்டுள்ளது.