உதயநிதியிடம் உண்டியல் பணத்தை பொது நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுவர் சிறுமியர்!

udhayanidhi
உதயநிதியிடம் உண்டியல் பணத்தை பொது நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுவர் சிறுமியர்!
Mahendran| Last Modified சனி, 3 ஜூலை 2021 (21:19 IST)
சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினிடம் சிறுவர்-சிறுமிகள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக கொடுத்துள்ளனர் இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
விருத்தாசலத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சனா கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தன் சேமிப்பு ரூ.146ஐ இன்று என்னிடம் வழங்கினார். மேலும், ரவை, கடுகு, உப்பை கொண்டு என்னை ஓவியமாக வரைந்து என்னிடம் பரிசளித்தார். சஞ்சனாவின் தூய அன்புக்கு நன்றி.

கடலூர், விருத்தாசலத்தை சேர்ந்த புஷ்பராஜ்-இந்திரா தம்பதியரின் மகள்கள் பிரணவி, கனிஷ்கா இருவரும் தங்களின் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க சேர்த்து வைத்திருந்த தொகையை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினர். நன்றி.
கடலூர், வடலூரை சேர்ந்த சாகுல் ஹமீத்-பரக்கத் நிஷா தம்பதியரின் மகள்
அஃபினா பாத்திமா தன்னுடைய உண்டியல் சேமிப்பை கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்
இதில் மேலும் படிக்கவும் :