வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 26 நவம்பர் 2022 (14:39 IST)

தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்?- வைரமுத்து

vairamuthu
தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளும்பொழுதே இந்தியைத் திணிப்பது என்ன நியாயம்? என கவிஞர் வைரமுத்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்ததுடன், ஐ.நா சபையின் அலுவல மொழிகளில் ஒன்றாக இந்தியை ஆக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், சமீபத்தில், அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11 வது அறிக்கையை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், எல்லா மாநிலங்களில் ஆங்கிலத்தைவிட பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.

இதற்கு, இந்தி மொழி ஆதிக்கம் செலுத்தினால் இந்தியாவில் பல நாடுகள் பிறக்கும் என  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில், எங்களை ஆண்ட
இஸ்லாமியரோ தெலுங்கரோ மராட்டியரோ வெள்ளையரோ
தங்கள் தாய் மொழியை
எங்கள் தலையில் திணித்ததில்லை

தமிழ்நாட்டைத்
தமிழர்கள் ஆளும்பொழுதே
இந்தியைத் திணிப்பது
என்ன நியாயம்?

அதிகாரமிக்கவர்களே
அன்போடு சொல்கிறேன்

புலியைத்
தொட்டாலும் தொடுக
மொழியைத்
தொடாது விடுக எனத் தெரிவித்துள்ளார்.   

Edited by Sinoj