செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (16:47 IST)

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் -அமைச்சர் அன்பில் மகேஷ்

நடிகரும் எம்.எல்.ஏ., வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதல் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. ஸ்டாலின் முதல்வர் பொறுபேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

எதிர்க்கட்சியான அதிமுக ஆளும் திமுக அரசின் மீது விமர்சனங்களும் குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர். இருப்பினும் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டை நீதிமன்றம் பாராட்டியது.

இந்நிலையில், எம்.எல்.ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:   உதயநிதிகு எந்தப் பதவி கொஉத்தாலும் அவரது தாத்தா அப்பாவைப் போல்  சிறப்பாகச் செயல்படுவார். உதயநிதிக்கு  அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.