உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், மிதிவண்டி உள்ளிட்ட நலத்திட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
மழைவெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று அதற்கு தீர்வு காணும் முதல்வரை நான் பெற்றிருக்கிறொம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அயராது உழைத்த உதயதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் எனக் கூறினார்.