1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Type writing exam postponed to November 19

கனமழையால் தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு!

type writing
கனமழையால் தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக வங்க கடலில் தோன்றியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக நாளையும் மறுநாளும் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்
 
நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த தட்டச்சு தேர்வுக்கு பதிலாக நவம்பர் 19 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.யை
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் ப்ளூ டிக் பெற எவ்வளவு கட்டணம்? எலான் மஸ்க் அறிவிப்பு!