ஜெயக்குமார் மட்டுமல்ல...இன்னும் 2 அமைச்சர்கள் - பீதி கிளப்பும் வெற்றிவேல்

Last Modified புதன், 24 அக்டோபர் 2018 (11:27 IST)
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. 

 
சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.   
 
ஆனால், ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மைதான். சிபாரிசுக்கு வந்த பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்கமருந்து கலந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார். அதன்பின், அடிக்கடி அப்பெண்ணை பயன்படுத்திக்கொண்டார். அதனால் குழந்தை பிறந்தது என வெற்றிவேல் எம்.எல்.ஏ இன்று செய்தியாளர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.  
 
மேலும், அமைச்சர் ஜெயக்குமாரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இலவச வீடுகளை கொடுத்து அவர் சரிகட்டினார். அந்த பெண்கள் தற்போது குடும்பமாகி வாழ்ந்து வருகின்றனர். எனவே, அதுபற்றி பேசினால் பலரின் வாழ்க்கை நாசமாகும். பெண்கள் விஷயத்தில் அவர் எப்படியென வட சென்னைக்கே தெரியும். விரைவில், அவரால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வெளியே வருவார்கள் என அவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.
 
அதேபோல், ஜெயக்குமார் மட்டுமல்ல.. இன்னும் இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். அவர்களின் பெயரை இப்போது கூற முடியாது என அவர் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :