திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (14:06 IST)

பெண்ணுக்கு கர்ப்பத்தடை மாத்திரைகளை கொடுத்த ஜெயக்குமார் - வெற்றிவேல் பகீர் தகவல்

பெண்ணை கற்பழித்துவிட்டு அவருக்கு கர்ப்பத்தடை மாத்திரைகளை அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து கொடுத்து வந்ததாக வெற்றிவேல் எம்.எல்.ஏ பகீர் பேட்டியளித்துள்ளார்.

 
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. சிபாரிசுக்கு வந்த பெண்ணை அவர் கற்பழித்ததால், அப்பெண் கர்ப்பமாகி குழந்தை பெற்றார் எனவும், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவரின் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் வெளியாகியது. ஆனால், இந்த புகாரை ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆடியோவை மாபிங் செய்துள்ளனர். இதுபற்றி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ “ சிபாரிசுக்காக வந்த பெண்ணுக்கு ஜெயக்குமார் வீட்டில் பழச்சாறு கொடுத்துள்ளனர். அதில் மயங்கிய பெண்ணை அவர் கற்பழித்துள்ளார். இதுபற்றி அவரின் தாய் கேட்டதற்கு, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாய் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதன் பின் பல இடங்களுக்கு அப்பெண்ணை வரவழைத்து கற்பழித்துள்ளார்.  திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அப்பெண்ணை அவர் பலமுறை சந்தித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது” என அதிர்ச்சி பேட்டியளித்துள்ளார். 

 
மேலும், மேலும், அப்பெண் கர்ப்பம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக கர்ப்பதடை மாத்திரை தொடர்ந்து கொடுத்துள்ளார். ஆனால், ஒருகட்டத்தில் உஷாரான அப்பெண் மாத்திரைகளை சாப்பிடவில்லை. எனவே, கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ளார். 
 
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேற்கொண்டு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறந்த குழந்தையின் சான்றிதழை வைத்து முகவரியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த ஆடியோவை நாங்கள் ரிலீசாகவில்லை. உரிய ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் குற்றச்சாட்டு எதுவும் கூற மாட்டோம்.
 
அமைச்சர் ஜெயக்குமார் ராஜினாமா செய்து விட்டு புகாரை சந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் என்னுடைய பாதுகாப்பில் இல்லை. ஜெயக்குமாரை போல் வேறு சில அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும். ஆடியோ தவிர வேறு சில ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. தகுந்த நேரத்தில் அவற்றை வெளியிடுவோம்” என வெற்றிவேல் கூறினார்.