1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (11:51 IST)

இன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா!

இன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டும், இன்னொரு பக்கம் கொரோனா வைரஸிலிருந்து குணமாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸால் தினந்தோறும் ஓரிரு எம்எல்ஏகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று பழனி தொகுதி எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மேலும் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா என்ற தகவல் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று சோழவந்தான் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் மற்றும் திருச்சி மணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் மதுரையில் உள்ள மருத்துவமனையிலும் திருச்சி மணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் திருச்சி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பபட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது