1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (17:06 IST)

கருணாநிதியின் அஞ்சலி பேனரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்: குமரியில் பரபரப்பு

கருணாநிதியின் அஞ்சலி பேனரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது என்பது தெரிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட திமுகவினர் அனைவரும் அவரது புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர் 
 
இந்த நிலையில் அதே போல் குமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் என்ற பகுதியில் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேனர்கள் வைக்கப்பட்டு அதற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த பேனர்கள் திடீரென மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, கருணாநிதி புகைப்படத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். முன்னாள் திமுக தலைவரின் படத்திற்கு மரியாதை செய்த பின் இரவில் அந்த படத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 
 
இதனை அடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் வலியுறுத்தியதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்