குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி – மேலும் இருவர் கைது !

கண்ணன் மற்றும் டிங்கர் குமார்
Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (08:18 IST)
கண்ணன் மற்றும் டிங்கர் குமார்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பெட்ரோல் குண்டு வீச முயற்சிக்கப்பட்ட வழக்கில் மூளையாக செயல்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் 3 பைக்குகளில் வந்த சிலர் பெட்ரோல் குண்டுகளை எடுத்து, குருமூர்த்தியின் வீட்டின் மீது வீச முயற்சித்துள்ளனர்.அவர்களை வீட்டில் காவலர்கள் விரட்டியடித்துள்ளனர். அதனால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் குருமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவரது பாதுகாப்பை உறுதி செய்வதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.


அதன்படி, சிசிடிவி கேமராவை ஆதாரமாக வைத்து இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த 8 பேரும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக மேலும் டிங்கர் குமார், கண்ணன் ஆகிய இருவரைப் போலீஸார்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :