வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2022 (15:22 IST)

ஆதார் அட்டை வைத்திருந்தால் ரூ.4.78 லட்சம் கடன் வழங்குகிறதா மத்திய அரசு?

aadhar
ஆதார் அட்டை வைத்திருந்தால் மத்திய அரசு 4.78 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக வதந்தி ஒன்று பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஒவ்வொரு இந்தியருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒன்று என்ற நிலையில் கிட்டத்தட்ட அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை இணைத்து ஒரு வதந்தி பரவி வருகிறது. அந்த வகையில் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் உருவாய் 4.78 லட்சம் ரூபாய் மத்திய அரசு கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் இது பொய்யான தகவல் என்றும் இதனை சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran