மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி – பாலிவுட் நடிகருக்கு கொரோனா சோதனை!

Last Modified ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:52 IST)

நடிகர் சஞ்சய் தத்துக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் சிறை தண்டனையை முடித்துக் கொண்டு இப்போது விடுதலை திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக கே ஜி எப் படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவரது போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கொரோன ரேபிட் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனையிலேயே அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :