நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..
நாளை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கேற்காது என்று தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத நிலையில், தற்போது விஜய் கட்சியும் பங்கேற்கவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாளை அன்புமணி தரப்பில் பாட்டாளி மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக வெற்றி கழகத்திற்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகம் கலந்து கொள்ளாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோட்டில் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு வேலைகளில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பிஸியாக இருப்பதால் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அதிமுக கூறிவிட்ட நிலையில், தற்போது தமிழக வெற்றி கழகமும் பங்கேற்காது என கூறியிருப்பது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
Edited by Siva