1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2026 (20:46 IST)

234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம்!... தேதியை மாற்றிய விஜய்!..

karur vijay
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. மற்ற கட்சிகள் கூட்டணியில் இருக்கும் போது தவெக மற்றும் தனித்துப் போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தனித்து போட்டியிடுகிறார்கள்..

தவெக கட்சி சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது.. ஒருபக்கம் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நாளை அந்த பகுதியில் அவர் 5 இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுக்காததால் அது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. எனவே வருகிற 30ம் தேதி அனுமதி கேட்டு மீண்டும் தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம்,  தவெகவின் 234 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தார்.. சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்று இந்த நிகழ்ச்சி நடக்கவிருந்தது. ஆனால் என்ன காரணமோ அது நடக்கவில்லை.. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில்தான் 234 தொகுதிகளுக்குமான தவெக வேட்பாளர்களை வருகிற 29ம் தேதி ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்யவிருக்கிறார். காலை 11 மணிக்கு தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.