ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (13:31 IST)

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

Vijay
மோசடி வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து  சில மணி நிமிடங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக தரப்பி வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 கரூர் மாவட்டம் குளித்தலையில், மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
 
கைது செய்யப்பட்ட ராஜாவுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அவருக்கு தமிழக வெற்றி கழகத்தில் அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதுவரை அவர் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran