வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 5 அக்டோபர் 2024 (11:49 IST)

நடிகை சோனா வீட்டில் திருட முயன்ற இருவர் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!

கவர்ச்சி நடிகை சோனா வீட்டில் கத்தியை காட்டி பயமுறுத்தி திருட முயன்ற இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகை சோனா, சென்னை மதுரவாயல் அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை திடீரென அவரது வீட்டில் இரண்டு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கத்தியை காட்டி அவரை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

சோனாவின் வீட்டில் அவர்கள் திருட முயன்றதாகவும், ஆனால் சோனா அலறியதை அடுத்து அக்கம் பக்கம் வந்ததால் திருடர்கள் தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. இது குறித்து அழைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் கத்தியை காட்டி மிரட்டியவர்கள் லோகேஷ், சிவா ஆகிய இருவர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருடும் நோக்கத்தில் சுவர் ஏறி வந்தார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.


Edited by Mahendran