புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2024 (16:07 IST)

காதலருடன் இரவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் கொடுமை: 3 பேர் கைது..!

கோப்புப் படம்
காதலருடன் இரவில் நடை பயிற்சி சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கொண்ட கும்பலை மகாராஷ்டிரா மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே நகரில், 21 வயது இளம் பெண் தனது காதலனுடன் நடை பயிற்சிக்கு சென்றபோது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென காரில் வந்த மூன்று பேர் தங்களை மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு, இருவரையும் தகாத வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து, அந்த பெண்ணுடன் வந்த காதலரை அடித்து உதைத்து விட்டு, அந்த பெண்ணை தங்கள் காரில் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். 
 
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் புனே பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva