1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk minister venkat ramanan comment about rice

அரிசி கிலோ ரூ.30-க்கு கிடைக்குது!.. வாங்குங்க!.. அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி!..

venkat ramanan
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரிசியின் விலை உயர்ந்து விட்டது. ஒரு கிலோவுக்கும், 25 கிலோ மூட்டைக்குமான விலை அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிருந்து அரிசி அதிக அளவில் இறக்குமதி செய்யப்படாதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

எதிர்கட்சியான திமுகவும் கதை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. ஆனால் அப்படி ஒன்றும் அரசியல் விலை உயர்ந்துவிடவில்லை என உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறி வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை அரிசி விலை ஏற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வெங்கட ரமணன் ‘அரிசியின் விலையை குறைக்கவே கூட்டுறவு பண்டக சாலைகளிலும், அமுதம் அங்காடிகளிலும் அரிசி ரூ.30க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.30 க்கு விற்பதால் விலை குறையும் என நம்புகிறேன்’ என அவர் தெரிவித்திருக்கிறார்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஸ்டேட் பாங்க் ஆஃப் வங்கியில் ஹேக்கர்கள் கைவரிசை.. 3.75 லட்சம் வாடிக்கையாளர்களின் ரகசியங்கள் லீக்?