சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..
தவெக தலைவர் விஜய் வருகிற 18-ஆம் தேதி ஈரோட்டில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவிருக்கிறார். ஏற்கனவே ஒவ்வொருவரும் சனிக்கிழமையும் அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து பேசி வந்தார். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் அது நடக்கவில்லை. அதன்பின் ஒரு மாத காலம் தவெகவே முடங்கி கிடந்தது. அதன்பின் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார் விஜய்.
அதன்பின் இந்த மாதம் 5ஆம் தேதி சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்பை நடத்த தவெக தரப்பில் அனுமதி கேட்டபோது தமிழக போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தி அங்கு போய் பேசினார் விஜய். அடுத்து ஈரோட்டில் வருகிற 18-ஆம் தேதி பேசவிருக்கிறார்.
அதற்கான ஏற்பாடுகளை சமீபத்தில் அந்த கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்து வருகிறார். இந்நிலையில் 18ம் தேதி ஈரோட்டுக்கு விஜய் வருவது பற்றி கருத்து தெரிவித்த ஈரோடு தவெக மாவட்ட செயலாளர் விஜய் பாலாஜி டிசம்பர் 18 நம்ம சாமி நம்ம எல்லைக்குள்ள வருது.. அந்த சாமி தேர்ல நம்ம ஊருக்குள்ள ஊர்வலம் வரப்போகுது.. அந்த சாமியே பத்திரமா திரும்ப கோவிலுக்குள் கொண்டு போக வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்ம எல்லாருக்கும் இருக்கு என பேசி இருக்கிறார்.
இதையடுத்து கரூர்ல இப்படித்தான் அவரை கடவுள் போல பாவித்து பலரும் இறந்து போனார்கள். இன்னும் இவர்கள் திருந்தலயா என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.