செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Bala
Last Modified: திங்கள், 15 டிசம்பர் 2025 (11:59 IST)

நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்? ‘பராசக்தி’ படத்துக்காக இவ்ளோ ரிஸ்க்கா?

நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்?  ‘பராசக்தி’ படத்துக்காக இவ்ளோ ரிஸ்க்கா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பராசக்தி. பொங்கல் ரிலீஸாக இந்தப் படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த ரிலீஸில் ஒரு வேளை மாற்றம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. விஜய் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 9 ஆம் தேதி ஜன நாயகன் திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
 
ஜன நாயகன் திரைப்படம் ரிலிஸாகும் அதே தேதியில்தான் பராசக்தி படமும் வெளியாக வேண்டும் என சிவகார்த்திகேயன் சொல்வதாக இப்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் பேசுகையில் சிவகார்த்திகேயன் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்குற மாதிரிதான் இருக்கிறது. நன்றியை மறந்துட்டாரோ என்றுதான் தோன்றுகிறது என அந்தணன் கூறியிருக்கிறார்.
 
வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த திரையுலகில் யார் உதவியில்லாமல் அவர் வரவில்லை. யாரோ எவர் மூலமாகவோ ஒருவர் அவரை மெல்ல மெல்ல கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசியில் அவர் ஜனரஞ்சகமான வெற்றிகளை கொடுத்திருந்தாலும் கூட தன் படத்தில் அவருக்கு ஒரு காட்சியை கொடுக்க சம்மதித்திருக்கிறார் என்றால் விஜயின் மனசு எப்படிப்பட்ட மனசு என சிவகார்த்திகேயனுக்கு புரிந்திருக்க வேண்டும்.
 
சிவகார்த்திகேயன் இந்த தயாரிப்பாளர்களின் கை கால்களில் விழுந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி போடுங்கனு கேட்குறதுதான் மரியாதையுள்ள மனுஷனுக்கு அழகு. ஆனால் சிவகார்த்திகேயன் அதை செய்யவில்லை. அதற்கு நேர் எதிர்மாறாக ஒன்றை செய்திருக்கிறார் என்று கேள்விப்படும் போது எனக்கே வருத்தமாகிவிட்டது.
 
தேவையில்ல்லாத ஒரு ரிஸ்க்கை சிவகார்த்திகேயன் எடுத்தாரோ என்றுதான் தோன்றுகிறது. ஒரு வேளை இது தானாக நடந்தது என்று எடுத்துக் கொண்டாலும் ஒரு ஹீரோவாக அவருக்கு தெரியாதா? ஒரு படத்தை ஆரம்பிக்கிறார்கள் என்றால் அது எந்த தேதியில் ரிலீஸுக்கு கொண்டு வருவார்கள் உட்பட எல்லாமே அந்த ஹீரோவுக்கு தெரிந்திருக்கும். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் தாமதமாக ஆரம்பித்து சீக்கிரமாக முடிக்கப்பட்ட படம்.
 
அப்படி இருக்கும் போது விஜயுடன் மோத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விரைவாக முடித்திருக்கிறார்கள். இது சிவகார்த்திகேயனுக்கு தெரியாமலா இருந்திருக்கும்? என்று அந்தணன் கூறியுள்ளார்.