1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk got two more mla by election result

2 தொகுதிகளிலும் வெற்றி.. தவெகவுக்கு மேலும் 2 எம்.எல்.ஏக்கள்!..

vijay
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டது. எனவே, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைத்தார். எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதாவது தவெக அரசுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை..

ஒருபக்கம், அதிமுகவிலிருந்து 7 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து அந்த 7 தொகுதிகளும் காலியாக இருந்தது. அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளிலும் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று காலை அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதல் இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது அந்த இரண்டு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுவிட்டது. மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 72103 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல், தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா 66,841 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.எனவே, தவெகவுக்கு மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளனர். ஏற்கனவே 107 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 2 எம்.எல்.ஏக்கள் சேர்ந்து தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இது மக்களுக்கு கிடைத்த வெற்றி!. மிருக குண பேச்சுக்கு மக்கள் கொடுத்த பதிலடி!.. முதல்வர் விஜய் பதிவு!..