வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (15:05 IST)

தினகரன் ஒரு திருடன் - அமைச்சர் ஜெயக்குமர் அநாகரீக பேட்டி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் மோதல் முற்றி வருகிறது.


 

 
இதன் எதிரொலியாக ஒருவரை ஒருவர் வசை பாடி வருகின்றனர். ஒருவருக்கெதிரக ஒருவர் மோசமான கருத்துகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் தினகரன் மாமியார் வீட்டிற்கு செல்வார் என தெரிவித்தார். ஆனால், நான் பலமுறை மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். இப்போதுள்ள சூழ்நிலையில், அனைத்து அதிமுக அமைச்சர்களும் விரைவில் மாமியார் வீட்டிற்கு செல்வார்கள் என தினகரன் கூறினார்.
 
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “தமிழ் நாட்டில் ஒரு பல மொழி இருக்கிறது. ஊரின் நிலை தெரிந்து உடும்பை தோளில் போட்டானாம் ஒருவன். அதாவது, சுவரேறி திருடன் வந்தவன் ஊர் மக்களை பார்த்தவுடன், தோளில் இருந்த உடும்பை காட்டி வித்தை காட்டினானாம். அதாவது, தன் திருடன் இல்லை என்பதை மறைக்கவே அப்படி செய்தானாம். அது போலத்தான் தினகரன். 
 
ஆனால், தினகரனின் வித்தையை மக்கள் ஏற்க மாட்டார்கள். தினகரன், மு.க.ஸ்டாலின் என எத்தனை பேர் வந்தாலும், அதிமுக ஆட்சியை அசைக்க கூட முடியாது” என அவர் கூறினார்.