திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (21:46 IST)

நடிகை ராணி பாலியல் குற்றச்சாட்டு: நடிகர் சங்கத்தில் புகார் அளித்த சண்முகராஜன்

சென்னை அருகே விளம்பர படப்பிடிப்பு ஒன்றின் படப்பிடிப்பு நடந்தபோது தனக்கு நடிகர் சண்முகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ராணி காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். பின்னர் ஒருசில மணி நேரங்களில் நடிகை ராணி தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார்

நடிகர் சண்முகராஜன் மன்னிப்பு கேட்டதால் புகாரை திரும்ப பெற்றதாக ராணியும், மன்னிப்பு கேட்கவில்லை பொய்ப்புகார் என்பதை உணர்ந்து அவரே புகாரை திரும்ப பெற்றதாக சண்முகராஜனும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தன் மீது பொய்யான தகவலை பரப்பி வரும் ராணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சண்முகராஜன் புகார் அளித்துள்ளார். தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனக்கு சங்கம் ரெட் கார்டு அளிக்கட்டும் என்றும் தன் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் தான் திரையுலகை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும் கூறிய சண்முகராஜன், அதேபோல் நடிகை ராணி குற்றம் செய்திருந்தால் அவருக்கு ரெட் கார்டு அளிக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சங்கம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்