ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2018 (14:32 IST)

விசாரணை கமிஷனிடம் தினகரன் கொடுத்த பென் டிரைவ் - ஜெ. வீடியோக்கள் அடங்கியதா?

ஜெ.வின் மரணம் தொடர்பான விசாரணை கமிஷனிடம் தினகரன் தரப்பில் ஒன்று ஒரு பென் டிரைவ் சமர்பிக்கப்பட்டுள்ளது.

 
ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெ.விற்கு நெருக்கமானவர்கள், சசிகலாவின் உறவினர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
 
அந்நிலையில்தான், ஜெ.வின் சிகிச்சை வீடியோ வெளியானது. எனவே,  இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா, டிடிவி தினகரன் மற்றும் சிறையில் உள்ள சசிகலா ஆகியோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிலையில், கிருஷ்ணப்பிரியா இன்று ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதேபோல், சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் ராஜ செந்தூர பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தினகரனும் விசாரணை ஆணையத்தில் ஆஜார் ஆக மாட்டார் எனத் தெரிகிறது. அவர் தரப்பில் ஒரு பெண் டிரைவை வழக்கறிஞர் ராஜ செந்தூர் பாண்டியன் இன்று காலை விசாரணை ஆணையத்தில் சமர்பித்தார். 
 
மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட 14 வீடியோக்கள் தங்கள் வசம் இருப்பதாகவும், விசாரணை ஆணையம் கேட்டால் அதை கொடுப்போம் என தினகரன் தரப்பு ஏற்கனவே கூறியிருந்தது. எனவே, சமீபத்தில் வெளியான ஜெ.வின் சிகிச்சை வீடியோ உள்ளிட்ட சில வீடியோக்கள் அந்த பென் டிரைவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜெ.வின் மரணத்திற்கு தாங்கள் காரணமல்ல; மருத்துவமனையில் அவருக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கவே இந்த வீடியோக்களை தினகரன் தரப்பு தற்போது விசாரணை கமிஷனிடம் கொடுத்துள்ளது எனத் தெரிகிறது.