வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 23 ஜூன் 2018 (12:41 IST)

இங்கே பேசிக்கொண்டிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் பேச வேண்டியதுதானே; டிடிவி தினகரன் பதிலடி

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்கத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறினார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் கூறியதாவது:-
 
மத்திய அரசுதானே இந்த மக்கள் விரோத அரசாங்கத்தை தாங்கிப் பிடித்துள்ளது. மத்திய அரசிடம்தான் ரா உளவுப் பிரிவு உள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று கூறும் மத்திய அமைச்சர் ஆட்சியைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. 
 
இங்கு பேசிக் கொண்டிருக்கும் அமைச்சர் மத்திய அரசிடம் பேசி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாமே என்று கூறினார்.