வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (16:15 IST)

தமிழகத்தில் 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது: டி.டி.வி.தினகரன்

Dinakaran
2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
என்.ஐ.ஏ சோதனை, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது, ஆயுதங்களை கையகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை பார்க்கும்போது 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
 
மேலும் ஓபிஎஸ் உடன் பேசி பல வருடங்கள் ஆகிறது என்றும் அதிமுகவினர் என்னோடு பேசுவதே அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் அரசியல் வேறு, பழக்கம் வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்